சின்னசாமி மைதானத்தில் சர்வதேச போட்டிக்கு ஏற்பாடு
சின்னசாமி மைதானத்தில் சர்வதேச போட்டிக்கு ஏற்பாடு
ADDED : மே 07, 2026 11:18 PM

பெங்களூரு: சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகள், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்படுவதாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க துணைத் தலைவர் சுஜித் சோமசுந்தர் கூறி உள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
கர்நாடகாவில் கிரிக்கெட்டை வளர்ப்பதே என் நோக்கம். எனக்கு எல்லா வசதிகளையும், கிரிக்கெட் செய்து கொடுத்தது. இதற்கு, கைமாறாக நானும் ஏதாவது செய்ய நினைக்கிறேன்.
மாநிலத்தில் கிரிக்கெட்டை வளர்ப்பது, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பதற்கு வீரர்களை தயார்படுத்துவது போன்றவற்றை முக்கிய நோக்கமாக சங்கம் வைத்து உள்ளது.
கிரிக்கெட்டில் நடுவர், பயிற்சியாளர் என பலருக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதை அனைவரும் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதற்கு சரியான வழிகாட்டுதல் தேவை. இதை கர்நாடகா கிரிக்கெட் சங்கம் செய்யும்.
கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் மைதானங்களை மேம்படுத்துவதே சங்கத்தின் நோக்கம். கருத்தரங்கம், பயிற்சி போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் பலரும் தங்கள் திறனை மேம்படுத்தி கொள்ளலாம்.
கிரிக்கெட்டில் ஈடுபடுவதற்கு பெண்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இதற்கான பல திட்டங்கள் உள்ளன. இவை சரியான நேரத்தில் செயல்படுத்தப்படும்.
டெஸ்ட் போட்டிகள் காலத்தால் அழியாது. சிவப்பு பந்துகளில் பயிற்சி எடுப்பது சிறந்தது. வெற்றியை கையாளுவது எளிது. தோல்வியை கையாளுவது கடினம். கிரிக்கெட்டில் நீண்ட துாரம் பயணிக்க, தோல்வியை கையாள தெரிய வேண்டும்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சர்வதேச அளவி லான கிரிக்கெட் போட்டிகளை நடத்த தேவையான ஏற்பாடுகள் செய்யயப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
