/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மைசூரிலும் கம்பாலா நடத்த ஏற்பாடு
/
மைசூரிலும் கம்பாலா நடத்த ஏற்பாடு
ADDED : நவ 07, 2025 05:24 AM

-
கர்நாடக கடலோரத்தில் பிரசித்தி பெற்ற, 'கம்பாலா' விளையாட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் நடக்கின்றன. இம்மாதம் இரண்டாம் வாரம், போட்டி துவங்குவதால் விளையாட்டு ஆர்வலர்கள் குஷியோடு காத்திருக்கின்றனர்.
கர்நாடக கடலோர பகுதிகளின், பாரம்பரியமான விளையாட்டு கம்பாலா. இதுவும் வீர விளையாட்டாகும். ஜல்லிக்கட்டு போன்று, மாடுகளை அடக்கும் போட்டியல்ல. வழுக்கும் சேற்றில் இரட்டை எருமைகள் இடையே நடக்கும் ஓட்ட பந்தயமாகும்.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு நகரில் இது மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. எண்ணெய் தடவி பளபளக்கும் உடலுடன் எருமைகள், சேற்றை கிழித்து கொண்டு பாய்ந்தோடுவது, கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
கம்பாலா போட்டிக்காகவே, எருமைகளை வளர்க்கின்றனர். இவை போட்டியில் பங்கேற்று, முதல் பரிசும் பெற்றுள்ளன. ஜல்லிக்கட்டு காளைகளை போன்று, கம்பாலாவில் பங்கேற்கும் எருமை மாடுகளை நிர்வகிக்க, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான ரூபாய் செலவிடுகின்றனர்.வெற்றி பெறும் எருமைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசு, தங்கம் பரிசளிக்கப்படும். சில இடங்களில் 2 சவரன் தங்கப்பதக்கம் வழங்குவதும் உண்டு.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பெங்களூரின் அரண்மனை மைதானத்தில், முதன் முறையாக கம்பாலா நடத்தப்பட்டது. எதிர்பார்த்ததை விட, மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது. கடந்தாண்டும் பெங்களூரில் கம்பாலா போட்டி நடத்த, ஏற்பாட்டாளர்கள் முயற்சித்தனர். ஆனால் அரண்மனை மைதானத்தில், போட்டி நடத்த அனுமதி கிடைக்கவில்லை.
ஆண்டுதோறும் நவம்பரில் கம்பாலா நடப்பது வழக்கம். மங்களூரில் நவம்பர் 15ம் தேதி, கம்பாலா துவங்குகிறது. இது 2026 ஏப்ரல் 11 வரை நான்கு மாதங்கள் நடக்கும். போட்டிக்கான ஏற்பாடு நடக்கிறது. எருமைகளை உரிமையாளர்கள் போட்டிக்கு தயார் செய்கின்றனர். காய்கறிகள், பழங்கள் உட்பட, ஊட்டச்சத்தான உணவு கொடுத்து, உடலை பலப்படுத்துகின்றனர். உடலில் எண்ணெய் தேய்த்து பளபளப்பாக்குகின்றனர். சேற்றில் ஓட பயிற்சி அளிக்கின்றனர்.
இம்முறை ஷிவமொக்கா மற்றும் மைசூரில் கம்பாலா நடத்த, ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர். ஷிவமொக்காவில் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மைசூரிலும் நடத்த அனுமதி எதிர்பார்க்கின்றனர்.எந்த இடத்தில் நடத்துவது என, ஆலோசிக்கின்றனர்
.நமது நிருபர் -

