/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ராணுவ அமைச்சருக்கு இடையூறு ஏற்படுத்த முயன்றவர் கைது
/
ராணுவ அமைச்சருக்கு இடையூறு ஏற்படுத்த முயன்றவர் கைது
ராணுவ அமைச்சருக்கு இடையூறு ஏற்படுத்த முயன்றவர் கைது
ராணுவ அமைச்சருக்கு இடையூறு ஏற்படுத்த முயன்றவர் கைது
ADDED : பிப் 20, 2025 06:43 AM

பெங்களூரு: ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் வாகனத்திற்கு, இடையூறு ஏற்படுத்த முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரில் கடந்த 10ம் தேதி முதல் 14ம் வரை, ஐந்து நாட்கள் விமான கண்காட்சி நடந்தது. இதை துவக்கி வைக்க 9ம் தேதி, மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் பெங்களூரு வந்தார்.
ஹெச்.ஏ.எல்., விமான நிலையத்தில் இருந்து கவர்னர் மாளிகைக்கு, காரில் அவர் சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
எம்.ஜி.ரோடு அருகே அனில் கும்ப்ளே சதுக்கத்தில், ஏட்டு தினேஷ் பாதுகாப்புப் பணியில் இருந்தார்.
அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபர் ஒருவர், சாலையில் வேகமாக செல்ல முயன்றார். அவரை தினேஷ் தடுத்தார்.
இதனால் அவருடன், வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பைக்கை கொண்டு மோதிவிட்டு வாலிபர் தப்பினார். ராணுவ அமைச்சரின் வாகனத்திற்கு இடையூறு ஏற்படுத்த முயன்றதாக, தினேஷ் அளித்த புகாரில், கப்பன் பார்க் போக்குவரத்து போலீசார் விசாரித்தனர்.
இதுதொடர்பாக அகமது தில்வார் உசேன், 25, என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.