/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆந்திர சிறைப்பறவை திருட்டு வழக்கில் கைது
/
ஆந்திர சிறைப்பறவை திருட்டு வழக்கில் கைது
ADDED : மே 15, 2025 11:18 PM

கொடிகேஹள்ளி: திருட்டு வழக்கில் ஆந்திராவை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு கொடிகேஹள்ளி போலீசார் நேற்று அதிகாலை 1:00 மணியளவில் பர்வதம்மா லே - அவுட் பகுதியில் ரோந்து சென்றனர். தனியார் விடுதி முன்பு சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் காமேபள்ளி கிராமத்தின் சீனிவாஸ், 34, என்பதும், திருடுவதை தொழிலாக வைத்திருந்ததும் தெரிந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.
பி.இ., பட்டதாரியான சீனிவாஸ், ஆந்திராவில் சினிமா துறையில் வேலை செய்து உள்ளார். ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி நிறைய பணத்தை இழந்ததுடன், கடனாளி ஆனார். கடனை அடைக்க முதல்முறையாக கடந்த 2010ல் ஆந்திராவில் தங்கும் விடுதியில் புகுந்து மடிக்கணினி திருடினார். அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்த பின், திருடுவதை தொழிலாக செய்தார்.
ஆந்திராவில் பல போலீஸ் நிலையங்களில் அவர் மீது 80க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. ஆந்திரா மட்டுமின்றி கர்நாடகாவின் பெங்களூரு, தார்வாட், பீதர், கலபுரகி, துமகூரு உள்ளிட்ட மாவட்டங்களிலும் கைவரிசை காட்டியது தெரிந்தது.
மைசூரில் வாடகை வீட்டில் தங்கி இருந்த சீனிவாஸ், திருடிய நகை, பணத்தை தனது வீட்டிற்கு கொண்டு வந்து பதுக்கி வைத்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 9.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கநகைகள், வெள்ளி பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர்.