தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ டி.ஜி.பி., கொலையில் கைது: சிறையில் ஓலமிடும் மனைவி

 டி.ஜி.பி., கொலையில் கைது: சிறையில் ஓலமிடும் மனைவி

 டி.ஜி.பி., கொலையில் கைது: சிறையில் ஓலமிடும் மனைவி


ADDED : டிச 14, 2025 08:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 14, 2025 08:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடகாவில் டி.ஜி.பி.,யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஓம் பிரகாஷ், 68, தன் குடும்பத்துடன் பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில் வசித்து வந்தார். இவரை அவரது மனைவி பல்லவி, கடந்த ஏப்ரலில் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

இதனால், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டார். இவருக்கு மனநல பாதிப்பு இருப்பதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இவர் சிறையில் அடைக்கப்படு பல மாதங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பல்லவி, 'என்னை வெளியே விட்டுவிடுங்கள்' என கூச்சலிட்டு கொண்டிருக்கிறார்.

பைத்தியம் பிடித்தது போல நடந்து கொள்கிறார். அவரது சிறைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. அவரை கட்டுப்படுத்துவது பெண் சிறை ஊழியர்களுக்கு சிரமமாக உள்ளது. மருத்துவர்களை அழைத்து வந்து ஆலோசனை நடத்த சிறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us