/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சந்தேக நபர்கள் நடமாட்டம் அரவிந்த் பெல்லத் எச்சரிக்கை
/
சந்தேக நபர்கள் நடமாட்டம் அரவிந்த் பெல்லத் எச்சரிக்கை
சந்தேக நபர்கள் நடமாட்டம் அரவிந்த் பெல்லத் எச்சரிக்கை
சந்தேக நபர்கள் நடமாட்டம் அரவிந்த் பெல்லத் எச்சரிக்கை
ADDED : மே 18, 2025 08:43 PM

ஹூப்பள்ளி : அறிமுகம் இல்லாத, சந்தேகத்திற்கிடமான பல்வேறு நாட்டினர், ஹூப்பள்ளி - தார்வாட் நகரின் மசூதிகளில் நடமாடுகின்றனர். இதை ஆய்வு செய்யும்படி பா.ஜ., - எம்.எல்.ஏ., அரவிந்த் பெல்லத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ஹூப்பள்ளி - தார்வாட் நகர போலீஸ் கமிஷனர் சசிகுமாருக்கு, எம்.எல்.ஏ., அரவிந்த் பெல்லத் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஹூப்பள்ளி - தார்வாட் இரட்டை நகரங்களின் சில மசூதிகளில், அறிமுகமில்லாத நபர்கள் நடமாடுகின்றனர். இவர்கள் உள்ளூர் மக்கள் அல்ல. வெளிநாடுகளின் நபர்கள் போன்று தென்படுகின்றனர். இவர்களின் செயல்பாடு சந்தேகத்துக்கு இடமளிக்கிறது.
இரட்டை நகரங்களின் குடிசைப் பகுதிகள் உட்பட, பல்வேறு இடங்களில் சந்தேகத்துக்குரிய நபர்கள் வசிப்பதாக தகவல் வந்துள்ளது. போலீஸ் துறை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். அந்நபர்களை கண்டுபிடித்து விசாரணை நடத்த வேண்டும்.
இந்த நபர்களால் ஹூப்பள்ளி - தார்வாடில், அசம்பாவிதங்கள் நடக்கலாம் என, அஞ்சப்படுகிறது. அசம்பாவிதங்கள் நடக்கும் முன், போலீசார் விரைந்து செயல்பட்டு, அபாயத்தை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.