/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் அதிகரிப்பு ராகுலுக்கு அரவிந்த் லிம்பாவளி கேள்வி
/
பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் அதிகரிப்பு ராகுலுக்கு அரவிந்த் லிம்பாவளி கேள்வி
பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் அதிகரிப்பு ராகுலுக்கு அரவிந்த் லிம்பாவளி கேள்வி
பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் அதிகரிப்பு ராகுலுக்கு அரவிந்த் லிம்பாவளி கேள்வி
ADDED : ஆக 09, 2025 04:51 AM

பெங்களூரு: “மஹாதேவபுரா சட்டசபை தொகுதியில், பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் அதிகரிக்கிறது. இதில் ராகுலுக்கு அதிருப்தி ஏன் என்பது புரியவில்லை,” என, பா.ஜ., முன்னாள் அமைச்சர் அரவிந்த் லிம்பாவளி கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் எம்.பி., ராகுலின் குற்றச்சாட்டு தொடர்பாக, மல்லேஸ்வரத்தில் நேற்று அவர் கூறியதாவது:
கடந்த 2023 சட்டசபை தேர்தலில், மஹாதேவபுரா சட்டசபை தொகுதியில் 6,07,135 வாக்காளர்கள் இருந்தனர்; 3,29,841 பேர் ஓட்டுப் போட்டனர். 2024 லோக்சபா தேர்தலில் 6,59,733 வாக்காளர்கள் இருந்தனர்; 3,51,535 பேர் ஓட்டுப் போட்டனர். இத்தொகுதியில் பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் அதிகரிக்கிறது.
லோக்சபா தேர்தலில் ராஜாஜிநகர், காந்திநகர், சி.வி.ராமன் நகர், மஹாதேவபுரா சட்டசபை தொகுதிகளில் பா.ஜ., முன்னணியில் இருந்தது. இத்தொகுதியில் புலம் பெயர்ந்த மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்; வெளியே செல்வோரின் எண்ணிக்கையும் அதிகம்.
மஹாதேவபுராவில் 2016 - 17ல் 1,48,743 சொத்துகள் இருந்தன; மாநகராட்சிக்கு 361 கோடி ரூபாய் வரி கிடைத்தது. 2024 - 25ல் 3,59,468 சொத்துகள் இருந்தன; 885 கோடி ரூபாய் வரி வந்தது. என் தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என, முதல்வர் சித்தராமையாவிடம் கேட்பேன்.
எனக்கு ராகுலை போன்று, ஆறு மாத அவகாசம் கிடைக்கவில்லை. வெறும் 24 மணி நேரத்தில் சில முறைகேடுகளை கண்டுபிடித்தேன். சிவாஜி நகர், சாம்ராஜ்பேட் தொகுதிகளிலும், போலி வாக்காளர்கள் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.