/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'எனக்கு இன்னும் வீடு கொடுக்கல' அரசு மீது அசோக் குற்றச்சாட்டு
/
'எனக்கு இன்னும் வீடு கொடுக்கல' அரசு மீது அசோக் குற்றச்சாட்டு
'எனக்கு இன்னும் வீடு கொடுக்கல' அரசு மீது அசோக் குற்றச்சாட்டு
'எனக்கு இன்னும் வீடு கொடுக்கல' அரசு மீது அசோக் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 16, 2025 11:04 PM

பெங்களூரு: “எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எனக்கு, இரண்டு ஆண்டுகள் ஆகியும் அதிகாரப்பூர்வ அரசு இல்லம் வழங்கப்படவில்லை,” என, அரசு மீது பா.ஜ.,வின் அசோக் குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சிக்கந்துார் பகுதியில் பாலம் கட்டிய பெருமை மத்திய அரசுக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காக, முதல்வர் சித்தராமையா இந்த விஷயத்தில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார். பாலம் திறப்பு நிகழ்ச்சிக்கு சித்தராமையாவுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது.
அவரது பெயரும் பத்திரிகையில் இருந்தது. ஆனால் வேறு அரசு நிகழ்ச்சி இருந்ததால், அவரால் வர முடியவில்லை. எந்த நிகழ்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பது என்று முன்கூட்டியே அவர் தீர்மானித்திருக்க வேண்டும். அவரது விருப்பப்படி நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமற்றது.
எதிர்க்கட்சித் தலைவராக இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். அதிகாரப்பூர்வ அரசு இல்லம் எனக்கு இன்னும் ஒதுக்கப்படவில்லை. இதுகுறித்து ஆறு கடிதங்கள் எழுதிவிட்டேன். எந்த பதிலும் கிடைக்கவில்லை.
பெங்களூரில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகளில் நடக்கும் அரசு நிகழ்ச்சிக்கு சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,க்களை கூட இந்த அரசு அழைப்பது இல்லை. நானும் பெங்களூரு அரசியல்வாதி தான்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், பெங்களூரில் நடக்கும் நிகழ்ச்சி பற்றி என்னிடம், அரசு தரப்பில் யாரும் கலந்து ஆலோசித்தது இல்லை.
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, கர்நாடகாவின் சூப்பர் முதல்வர் ஆகிவிட்டார். சித்தராமையா மீது நம்பிக்கை இழந்த கட்சி மேலிடம், ஆட்சியை நடத்தும் பொறுப்பை சுர்ஜேவாலாவிடம் கொடுத்துள்ளது.
இவரது தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. சிவகுமாருக்கு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இல்லை. ராகுலுக்கு தான் விரும்பும் நபரை, முதல்வராக நியமிக்கும் அதிகாரம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.