கர்நாடக சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதா - 2025க்கு நேற்று சட்டசபையில் ஒப்புதல் கிடைத்தது. இந்த வரியை மத்திய அரசு அமல்படுத்திய பின், கர்நாடகாவுக்கு 25,000 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக, வருவாய் அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா கூறினார்
பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட யஷ்வந்த்பூர் எம்.எல்.ஏ., சோமசேகர், சாமுண்டீஸ்வரி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா, எம்.எல்.ஏ.,க்கள் ஓய்வு எடுக்கும் பகுதியில் அமர்ந்து நீண்ட நேரமாக ஏதோ பேசினர்.
அதானி காங்கிரஸ் உறுப்பினர் லட்சுமண் சவதியிடம், ஹுன்சூர் ம.ஜ.த., உறுப்பினர் ஹரிஷ் கவுடா ஏதோ ரகசியமாக பேசினார்
'புதிய தாலுகாக்களை அறிவிப்பது பெரிய விஷயம் இல்லை. ஆனால் அனைத்து தாலுகாக்களையும் ஒரே மாதிரியாக பார்க்க வேண்டும். தற்போதைக்கு புதிய தாலுகா அமைப்பது தொடர்பாக அரசிடம் எந்த திட்டமும் இல்லை' என்று, செல்லகெரே காங்கிரஸ் உறுப்பினர் ரகுமூர்த்தி கேள்விக்கு, வருவாய் அமைச்சர் கிருஷ்ணபைரேகவுடா பதில் அளித்தார்
'அமைச்சர்களிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று கூறிவிட்டு, சபைக்குள் இருக்காமல் அடிக்கடி வெளியே சென்றால் எப்படி' என்று, எச்.டி.கோட் காங்கிரஸ் உறுப்பினர் அனில் சிக்கமாதுவை, சபாநாயகர் காதர் கடிந்து கொண்டார்
பங்கார்பேட்டை காங்கிர ஸ் உறுப்பினர் நாராயணசாமி பேசுகையில், தான் கேட்ட கேள்வி பற்றி பேசாமல், பழைய கதைகளை பேசினார். இதற்கு பா.ஜ., உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எஸ்.சி., சமூகத்தை சேர்ந்த என்னை பேச விடாமல் தடுக்கிறீர்கள் என்று நாராயணசாமி குற்றம் சாட்டினார்.