தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று கூடுகிறது சட்டசபை 'ஜி ராம் ஜி' குறித்து விவாதம்?

 இன்று கூடுகிறது சட்டசபை 'ஜி ராம் ஜி' குறித்து விவாதம்?

 இன்று கூடுகிறது சட்டசபை 'ஜி ராம் ஜி' குறித்து விவாதம்?


ADDED : பிப் 02, 2026 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 04:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின், கர்நாடக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. இன்று முதல் 3 நாட்கள் 'ஜி ராம் ஜி' சட்டம் குறித்து விவாதம் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

கர்நாடக அரசின் நடப்பாண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 22ம் தேதி துவங்கியது. சட்டசபை நேற்று முன்தினம் முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால், அரசு உரையை படிக்காமல் கவர்னர் தாவர்சந்த் கெலாட், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்ததையும், அவரை பின்தொடர்ந்து சென்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பியது பற்றியுமே, விவாதம் நடந்தது.

அவ்வப்போது மற்ற பிரச்னைகள் பற்றியும் விவாதம் நடந்தது. மத்திய அரசின், 'ஜி ராம் ஜி சட்டம்' குறித்து விவாதிக்க வேண்டி இருந்ததால், இன்று முதல் 3 நாட்களுக்கு சட்டசபை கூட்டத்தை நீட்டித்து, சபாநாயகர் காதர் உத்தரவிட்டார். இந்த மூன்று நாட்களில், ஜி ராம் ஜி குறித்து விவாதம் நடத்த, காங்கிரஸ் உறுப்பினர்கள் தயாராக உள்ளனர்.

ஆனால் வருமான வரி சோதனைக்கு பயந்து, தொழில் அதிபர் சி.ஜே.ராய் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தது; மைசூரி ல் போதை பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது உட்பட, பல பிரச்னைகளை முன்வைத்து, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடந்த தயாராக உள்ளன.

இதனால் ஜி ராம் ஜி சட்டம் குறித்து விவாதம் நடப்பது அரிது என்றே கூறப்படுகிறது. இதையும் மீறி ஆளுங்கட்சியினர் விவாதம் நடத்துவரா என்றும் எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us