தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விதான் சவுதாவில் சட்டசபை கூட்டம் இன்று துவக்கம் பட்ஜெட் தாக்கல் செய்வதில் முதல்வர் புதிய சாதனை

 விதான் சவுதாவில் சட்டசபை கூட்டம் இன்று துவக்கம் பட்ஜெட் தாக்கல் செய்வதில் முதல்வர் புதிய சாதனை

 விதான் சவுதாவில் சட்டசபை கூட்டம் இன்று துவக்கம் பட்ஜெட் தாக்கல் செய்வதில் முதல்வர் புதிய சாதனை


ADDED : மார் 06, 2026 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 05:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரு விதான் சவுதாவில், கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் இன்று துவங்க உள்ளது. இன்றே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்வதில் முதல்வர் சித்தராமையா புதிய சாதனை படைக்க உள்ளார்.

கர்நாடக சட்டசபையின், 16வது கூட்டத்தொடர் பெங்களூரு விதான் சவுதாவில் உள்ள சட்டசபை அரங்கில் இன்று துவங்குகிறது. வரும், 27 ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இன்று காலை, 10:15 மணிக்கு சட்டசபை துவங்கியதும், நிதி துறையை தன் வசம் வைத்துள்ள முதல்வர் சித்தராமையா, 2026 - 2027 ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்வதில், அவர் புதிய சாதனை படைக்க உள்ளார். முதல்வராக அவர் இன்று தாக்கல் செய்ய இருப்பது, 10வது பட்ஜெட்டாகும். இதற்கு முன் ராமகிருஷ்ண ஹெக்டே முதல்வராக ஒன்பது முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

அந்த சாதனையை சித்தராமையா முறியடிக்க உள்ளார். ஒட்டு மொத்தமாக அவர் இன்று தாக்கல் செய்ய இருப்பது, 17வது பட்ஜெட்.

தேவகவுடா, ஜே.எச்.படேல் முதல்வர்களாக இருந் தபோது, அவர்களின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த சித்தராமையா 1995 - 1996; 1996 - 1997; 1997 - 1998; 1998 - 1999; 1999 - 2000; 2004 - 2005; 2005 - 2006 ம் ஆண்டுகளில் பட்ஜெட் தாக்கல் செய்து உள்ளார்.

முதல்வரான பின், 2013 - 2014; 2014 - 2015; 2015 - 2016; 2016 - 2017; 2017 - 2018; 2018 - 2019; 2023 - 2024; 2024 - 2025; 2025 - 2026 ஆகிய, நிதியாண்டுகளில் பட்ஜெட் தாக்கல் செய்து இருக்கிறார்.

ஏற்கனவே கர்நாடகா முதல்வராக அதிக காலம் பதவி வகித்தவர் என்ற பெருமையும், சித்தராமையாவுக்கு கிடைத்துள்ளது. கடந்த பட்ஜெட்டின் அளவு 4,09,549 கோடி ரூபாயாக இருந்தது.

இது கடைசியா? இந்த பட்ஜெட்டின் அளவு எவ்வளவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

முதல்வர் பதவிக்கான மோதல் நடக்கும் நிலையில், இது தான் சித்தராமையா தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட்டாக இருக்குமா என்றும், அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதற்கிடையில், சித்தராமையாவின் சாதனையை அவரது சொந்த ஊரான மைசூரில் காங்கிரசார் கொண்டாடி வருகின்றனர். பட்ஜெட் புத்தகம் இருக்கும் பெட்டியுடன் சித்தராமையா இருப்பது போன்று, மைசூரு அரண்மனை முன், 235 அடி நீளம், 70 அடி அகலத்தில் ரங்கோலி வரையப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us