/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சட்டசபை கூட்டம் 11ல் துவக்கம் பா.ஜ., - ம.ஜ.த., ஆலோசனை
/
சட்டசபை கூட்டம் 11ல் துவக்கம் பா.ஜ., - ம.ஜ.த., ஆலோசனை
சட்டசபை கூட்டம் 11ல் துவக்கம் பா.ஜ., - ம.ஜ.த., ஆலோசனை
சட்டசபை கூட்டம் 11ல் துவக்கம் பா.ஜ., - ம.ஜ.த., ஆலோசனை
ADDED : ஆக 06, 2025 12:29 AM

பெங்களூரு : கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் ஆக., 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்கிறது. இது தொடர்பாக, பெங்களூரு தனியார் ஹோட்டலில் நேற்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், மாநில தலைவர் விஜயேந்திரா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
சட்டசபை கூட்டத்தொடரில், ஆளுங்கட்சியின் மோசமான நிர்வாகம், ஊழல், ஆர்.சி.பி., கூட்ட நெரிசல் சம்பவம், அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காதது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட வேண்டிய பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
பின், அசோக் அளித்த பேட்டி:
சட்டசபை கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. வரும் 10ம் தேதி மாலை, பா.ஜ., - ம.ஜ.த., தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.
இது தொடர்பாக, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமியிடம் பேசிவிட்டேன். இக்கூட்டத்தில் அவரும் பங்கேற்கிறார். அவருடன், ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி உட்பட கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர். சட்டசபை கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய விஷயம் குறித்து விவாதிப்போம்.
அரசின் மோசமான நிர்வாகத்தால், அரசின் கருவூலம் காலியாக உள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களே, தங்கள் தொகுதிகளில் மேம்பாட்டுப் பணிகள் நடக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி உள்ளனர். இது குறித்தும் விவாதிக்கப்படும். முதல்வர் சித்தராமையா 'துாங்கும் ராமையா'வாகி விட்டார்.
அத்துடன், ஆர்.சி.பி., வெற்றி விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் இறந்தது; உரம் தட்டுப்பாடு, மழையால் பெங்களூரில் ஏற்பட்ட பாதிப்புகள், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரை, ஐந்து மாநகராட்சியாக பிரிப்பது, பெங்களூரு மேம்பாட்டுக்கு ஒரு பைசா கூட வழங்காதது, போதை மாபியா உட்பட பல்வே விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.