தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வரும் 14ல் சட்டசபை சபாநாயகர் தேர்தல்

 வரும் 14ல் சட்டசபை சபாநாயகர் தேர்தல்

 வரும் 14ல் சட்டசபை சபாநாயகர் தேர்தல்


ADDED : ஆக 12, 2026 12:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2026 12:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'காலியாக உள்ள கர்நாடக சட்டசபை சபாநாயகர் பதவிக்கான தேர்தல், நாளை மறுதினம் நடக்கிறது' என, சட்டசபை செயலர் விசாலாட்சி அறிவித்து உள்ளார்.

கர்நாடக சட்டசபை சபாநாயகராக இருந்த காதர், முதல்வர் சிவகுமார் தலைமையிலான அரசில் அமைச்சராக பதவியேற்று கொண்டார்.

இதையடுத்து, இப்பதவி காலியானது.

நாளை மழைக்கால சட்டசபை கூட்டத்தொடர் துவங்க உள்ளதால், தற்காலிக சபாநாயகராக, காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான டி.பி.ஜெயசந்திரா நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், சட்டசபை செயலர் விசாலாட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'காலியாக உள்ள கர்நாடக சட்டசபை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நாளை மறுதினம் நடத்த கவர்னர் உத்தரவிட்டு உள்ளார்.

'எனவே, இப்பதவி யில் யாரை சபாநாயகராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை, நாளை நண்பகல் 12:00 மணிக்குள், செயலருக்கு எழுத்துபூர்வமாக அறிவிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us