ஜாதியை சொல்லி திட்டி தாக்கியதாக 'ரூம் மேட்' மீது உதவி பேராசிரியை புகார்
ஜாதியை சொல்லி திட்டி தாக்கியதாக 'ரூம் மேட்' மீது உதவி பேராசிரியை புகார்
ADDED : ஏப் 29, 2026 12:26 AM
குமாரசாமி லே - அவுட்: ஜாதியை சொல்லி திட்டி தாக்கியதாக, ரூம் மேட் மீது உதவி பேராசிரியை போலீசில் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரு குமாரசாமி லே - அவுட்டில் உள்ள தனியார் கல்லுாரியின் உதவி பேராசிரியை பிரீத்தி ஜெயின், 35. கல்லுாரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார்.
கல்லுாரியில் புதிதாக பணிக்கு சேர்ந்த, இன்னொரு உதவி பேராசிரியை ஜோதிகுமாரி, 33, க்கு, பிரீத்தி தங்கியிருந்த அறை ஒதுக்கப்பட்டது. கடந்த, 22 ம் தேதி ஜோதி அறைக்கு சென்றார். சில நிமிடத்திலேயே அவரது ஜாதி பற்றி பிரீத்தி கேட்டுள்ளார்.
ஜோதி தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், பிரீத்தி தினமும் தொல்லை கொடுத்து உள்ளார்.
சாப்பிடும் விஷயத்தில் கூட, மனரீதியாக தொந்தரவு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மொபைல் போனில், அதிக சத்தத்துடன் பிரீத்தி பாடல் கேட்டு உள்ளார்.
இடைஞ்சலாக இருப்பதாக ஜோதி கூறியதால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஜோதியை ஜாதியை சொல்லி திட்டி, பிரீத்தி தாக்கியுள்ளார். முக தாடையில் காயம் அடைந்த ஜோதி, போலீசில் புகார் செய்தார். பிரீத்தியிடம் விசாரணை நடக்கிறது.
