தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/வக்கீல்கள் மீது தொடரும் தாக்குதல்: சங்கம் கண்டனம்

வக்கீல்கள் மீது தொடரும் தாக்குதல்: சங்கம் கண்டனம்

வக்கீல்கள் மீது தொடரும் தாக்குதல்: சங்கம் கண்டனம்


UPDATED : அக் 28, 2026 12:00 AM

ADDED : அக் 27, 2026 09:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 12:00 AM ADDED : அக் 27, 2026 09:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிக்கபல்லாபூர்: கவுரிபிதனுாரில் நேற்று காலை மூத்த வக்கீல் ஒருவரை, அவரின் அலுவலகம் முன், மர்ம நபர் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிக்கபல்லாபூர் மாவட்டம் கவுரிபிதனுார் தாலுகாவை சேர்ந்தவர் மூத்த வக்கீல் சன்னக்கி வெங்கடரமணப்பா. நகரின் காந்தி சதுக்கத்தில் அவரின் அலுவலகம் அமைந்து உள்ளது. நேற்று காலை முதல் மாடியில் உள்ள அலுவலகத்திற்கு படிக்கட்டில் ஏறி சென்றார்.

அப்போது அவரை பின்தொடர்ந்த வாலிபர் ஒருவர், சன்னக்கி வெங்கடரமணப்பாவின் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.

இதை பார்த்த அப்பகுதியினர், படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி., பத்மினி சாஹு, சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

பின், அவர் கூறுகையில், ‘‘கவுரிபிதனுார் நகர போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வழக்கு தீவிரமாக எடுக்கப்பட்டு உள்ளது.

குற்றச்சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

வக்கீல் மீதான தாக்குதலை வக்கீல்கள் சங்கம் கண்டித்து, நேற்று நீதிமன்ற நடவடிக்கையில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

கடந்த வாரம் பெங்களூரு ஒயிட்பீல்டில் வக்கீல் ஒருவர், தான் கட்டிய ஷெட்டில் தங்கியிருந்த பீஹாரை சேர்ந்த நான்கு பேர், வாடகை பணம் தரவில்லை.

இதை கேட்டதற்காக, அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இதில் இருவரையும் கைது செய்யப்பட்டுள்ளனர்; தலைமறைவான இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us