பஸ்களுக்கு தனியார் ஓட்டுநர்கள் நியமிக்க சங்கத்தினர் எதிர்ப்பு
பஸ்களுக்கு தனியார் ஓட்டுநர்கள் நியமிக்க சங்கத்தினர் எதிர்ப்பு
ADDED : ஆக 19, 2026 11:21 PM
பெங்களூரு: பெங்களூரில் புதிதாக வரவுள்ள, 4,500 எலக்ட்ரிக் பஸ்களில் தனியார் ஓட்டுநர்களை பணியமர்த்த போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
பி.எம்.டி.சி., எனும் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்தில், புதிதாக 4,500 எலக்ட்ரிக் பஸ்கள் சேவைக்கு வர உள்ளன.
இந்த பஸ்களுக்கு தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஓட்டுநர்களை நியமிக்க, பி.எம்.டி.சி., திட்டமிட்டது.
இதற்கு கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தினர் ஊழியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து, அச்சங்கத்தின் தலைவர் சந்திரசேகர் கூறியதாவது:
பெங்களூரில் இயங்கும் எலக்ட்ரிக் பஸ்களுக்கு, தனியார் ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவதால் விபத்துகள் அதிகமாக நடக்கின்றன.இது, போக்குவரத்து கழகம், சக ஓட்டுநர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது.
எனவே, எலக்ட்ரிக் பஸ்களி ல் தனியார் ஓட்டுநர்களை நியமிக்கக்கூடாது. புதிதாக சேவைக்கு வர உள்ள, 4,500 பஸ்களுக்கும் பி.எம்.டி.சி.,யில் பணிபுரியும் அனுபவம் வாய்ந்த அரசு ஓட்டுநர்களையே நியமிக்க வேண்டும்.
பி.எம்.டி.சி.,யை தனியார்மயமாக்கும் முயற்சியை மாநில அரசு கைவிட வேண்டும். 4,500 பஸ்களில் தனியார் ஓட்டுநர்கள் நியமிக்கப்பட்டால் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு கூறினார்.
