தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தங்கும் விடுதியில் 48 மான் கொம்புகள் பொருட்களை பறிமுதல் செய்த வனத்துறை

 தங்கும் விடுதியில் 48 மான் கொம்புகள் பொருட்களை பறிமுதல் செய்த வனத்துறை

 தங்கும் விடுதியில் 48 மான் கொம்புகள் பொருட்களை பறிமுதல் செய்த வனத்துறை


ADDED : ஆக 19, 2026 11:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 11:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாம்ராஜ் நகர்: தங்கும் விடுதியில் சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்த மான் மண்டை ஓடுகள், 48 மான் கொம்புகள், தோல்கள், மயில் இறகுகள், துப்பாக்கிகள் உட்பட பொருட்களை, வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.

சாம்ராஜ் நகர் மாவட்டம் குண்டுலுபேட் தாலுகாவின் கெப்பேபுரா கிராமத்தில் உள்ள தங்கும் விடுதியில், வன விலங்குகளின் எலும்புகள், பொருட்கள் இருப்பதாக விவசாய சங்கத்தினர், வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, அங்கு சோதனை நடத்தினர். இந்த சோதனையில், ஒரு மான் மண்டையோடு, 48 மான் கொம்புகள், மயில் இறகுகள், நான்கு துப்பாக்கிகள், ஒரு ரிவால்வர், ஒரு ஏர் பிஸ்டல், விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்ட வேலிகள் உட்பட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சம்பவ இடத்தை வனத்துறை உதவி வன பாதுகாவலர் சுரேஷ் உட்பட அதிகாரிகள் பார்வையிட்டனர்.

விவசாய சங்கத்தினர் கூறியதாவது:

பண்டிப்பூர் தேசிய பூங்காவில் அமைந்துள்ள இப்பகுதியில் சட்ட விரோதமாக வேட்டை உட்பட வன விலங்குகளுக்கு எதிரான நடவடிக்கை நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பண்டிப்பூரின் எல்லையில் உள்ள தங்கும் விடுதிகள், தங்கும் இல்லங்களில் தொடர்ந்து ஆய்வு நடத்த வேண்டும். வன ஆக்கிரமிப்பு, வன விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகள் கட்டுப்படு த்தப்பட வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us