sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மணல் கடத்தலை தடுத்த ஏ.எஸ்.ஐ., மீது தாக்குதல்?

மணல் கடத்தலை தடுத்த ஏ.எஸ்.ஐ., மீது தாக்குதல்?

மணல் கடத்தலை தடுத்த ஏ.எஸ்.ஐ., மீது தாக்குதல்?


ADDED : அக் 16, 2025 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2025 05:47 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

யாத்கிர்: ''மணல் கடத்தலை தடுக்க முயற்சித்த ஏ.எஸ்.ஐ.,யை கொள்ளையர் கடத்திச் சென்றுள்ளனர். சுர்புராவில் போலீசாருக்கு கூட பாதுகாப்பு இல்லை. சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது,'' என, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ராஜு கவுடா தெரிவித்தார்.

யாத்கிரில் நேற்று அவர் அளித்தபேட்டி:

யாத்கிர் மாவட்டம், சுர்புராவில் உள்ள கிருஷ்ணா நதியில், சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது. இதை தடுக்க முயற்சிக்கும் போலீசாரும் தாக்கப்படுகின்றனர்.

இதுபோன்று, 10 - 12 நாட்களுக்கு முன், மணல் கடத்தல் குறித்து ஏ.எஸ்.ஐ., நிங்கண்ணாவுக்கு தகவல் கிடைத்தது.

போலீசாருடன் அங்கு சென்ற அவரை, மணல் கடத்தல்காரர்கள் தாக்கி, நிங்கண்ணாவை தங்கள் லாரியில் கடத்திச் சென்றனர். ஒரு அரசியல் செல்வாக்கு மிக்கவரின் பண்ணை வீட்டில், அவரை கட்டிப் போட்டு அடித்துள்ளனர். அத்துடன், கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்து, அதை வீடியோகவும் பதிவு செய்துள்ளனர்.

அன்றிரவே, கூடுதல் போலீசார், பண்ணை வீட்டுக்கு சென்று, அரசியல் செல்வாக்கு மிக்கவரின் முன் மண்டியிட்டு, நிங்கண்ணாவை விடுத்துள்ளனர். உயிர் அச்சுறுத்தல் காரணமாக, அந்நபர் மீது நிங்கண்ணா புகார் அளிக்க தயங்குகிறார்.

மணல் கடத்தலை தடுக்க முயற்சித்த ஏ.எஸ்.ஐ., கொள்ளையர்கள் கடத்தி சென்றுள்ளனர். சுர்புராவில் போலீசாருக்கு கூட பாதுகாப்பு இல்லை. சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, எஸ்.பி., பிரித்விக் சங்கர் கூறுகையில், ''ஏ.ஐ.எஸ்., கடத்தல், தாக்குதல் தொடர்பாக விரிவான அறிக்கை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிட்டு உள்ளேன். சம்பவம் உறுதி செய்யப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us