/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காரை ஏற்றி போலீசாரை கொல்ல முயற்சி
/
காரை ஏற்றி போலீசாரை கொல்ல முயற்சி
ADDED : செப் 07, 2025 02:30 AM
உடுப்பி: மாடுகளை கடத்திச் செல்வதை தடுக்க முற்பட்ட போலீசார் மீது, காரை ஏற்றிக் கொலை செய்ய முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
உடுப்பி நகரின் ஹெஜமாடி சுங்கச்சாவடி வழியாக, மாடுகள் கடத்தப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எனவே ஆகஸ்ட் 5ம் தேதி மதியம், கங்கொல்லி போலீசார் சுங்கச்சாவடி அருகில் காத்திருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை, போலீசார் தடுத்து நிறுத்தி, சோதனை நடத்தியபோது, மாடுகளை இம்சிக்கும் வகையில் கட்டி அடைத்திருப்பது தெரிந்தது. காரில் இருந்த நபர்களை கீழே இறங்கும்படி கூறினர்.
ஆனால் அவர்கள், 'எங்களை தேடிக்கொண்டு, இதுவரை வந்துள்ளீர்களா?' என கேள்வி எழுப்பி, போலீசார் மீது காரை ஏற்றி காயப்படுத்திவிட்டு தப்பியோடினர். காயமடைந்த போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து, கங்கொள்ளி போலீசார் அளித்த புகாரின்படி, விசாரணை நடத்திய படுபிதரே போலீஸ் நிலைய போலீசார், முகமது அஜிம் காபு, முகமது ராஜிக் பஜபே ஆகியோரை நேற்று கைது செய்தனர்.