தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வாலிபரை கொல்ல முயற்சி உடலில் 68 இடங்களில் வெட்டு 

 வாலிபரை கொல்ல முயற்சி உடலில் 68 இடங்களில் வெட்டு 

 வாலிபரை கொல்ல முயற்சி உடலில் 68 இடங்களில் வெட்டு 


ADDED : மார் 12, 2026 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 05:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அக்ரஹாரா தாசரஹள்ளி: கொலைக்கு பழிக்கு பழி வாங்க பட்டப்பகலில் நடுரோட்டில் வாலிபரை, ஐந்து பேர் கும்பல் கத்தியால், சரமாரியாக வெட்டி கொல்ல முயன்றனர். உடலில் 68 இடங்களில் வெட்டு விழுந்தும், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார்.

பெங்களூரு மாகடி ரோடு அக்ரஹாரா தாசரஹள்ளியில் வசிப்பவர் சந்தோஷ், 27. இவருக்கும், சாம்ராஜ்நகரின் கொள்ளேகாலை சேர்ந்த மோகன், 30 என்பவருக்கும், கார்களை வாங்கி, விற்பது தொடர்பாக பிரச்னை இருந்தது. கடந்த 2024ல் மோகனை, சந்தோஷ், அவரது நண்பர்கள் சேர்ந்து கொலை செய்து உடலை ஏரியில் வீசினர்.

இந்த வழக்கில் கைதான சந்தோஷ் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மாதம் ஜாமினில் வெளியே வந்தார். நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு, அக்ரஹாரா தாசரஹள்ளி மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அங்கு வந்த மோகனின் தம்பி சரத் உட்பட 5 பேர், சந்தோஷை சுற்றி வளைத்து, கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.

பலத்த வெட்டு காயத்துடன் உயிருக்கு போராடிய சந்தோஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆபத்தான நிலையை அவர் தாண்டி உள்ளார்.

சந்தோஷ் உடலில் 68 இடங்களில், கத்தி வெட்டு விழுந்து உள்ளது. அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து உள்ளார். கொலை முயற்சி தொடர்பாக சந்தோஷ் பெற்றோர் அளித்த புகாரில், மாகடி ரோடு போலீசார், சரத் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

சந்தோஷை வெட்டுவது அப்பகுதியில் உள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது.

அந்த காட்சி தற்போது வெளியாகி, காண்போரை பதைபதைக்க வைத்து உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us