/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி: நேபாள வாலிபர் கைது
/
ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி: நேபாள வாலிபர் கைது
ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி: நேபாள வாலிபர் கைது
ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி: நேபாள வாலிபர் கைது
ADDED : பிப் 23, 2026 04:57 AM

இந்திராநகர்: பெங்களூரு இந்திராநகர் டபுள் ரோட்டில் 'பாங்க் ஆப் பரோடா வங்கி'க்கு சொந்தமான ஏ.டி.எம்., மையம் உள்ளது. இங்கு இரவு காவலாளி இல்லை. கடந்த 10ம் தேதி இரவு ஏ.டி.எம்., மையத்திற்குள் புகுந்த மர்மநபர்கள், கண்காணிப்பு கேமரா மீது டேப் ஒட்டினர்.
காஸ் கட்டர் இயந்திரத்தை பயன்படுத்தி, ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைக்க முயன்றனர். ஆனால் முயற்சி தோல்வி அடைந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மறுநாள் காலையில், கொள்ளை முயற்சி வெளிச்சத்திற்கு வந்தது. வங்கி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், இந்திராநகர் போலீசார் விசாரித்தனர்.
ஏ.டி.எம்., மையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில், நேபாள நாட்டை சேர்ந்த ராஜேந்திர சிங், 23, நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்திராநகரில் ஹோட்டலில் மாஸ்டராக வேலை செய்த இவர், ஏ.டி.எம்.,மில் கொள்ளையடித்து விட்டு சொந்த ஊருக்கு தப்பி செல்ல திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது.

