ADDED : செப் 26, 2026 11:17 PM
அ நிறம் | அளவு
குடகு: குடகு மாவட்டம், மடிகேரி தாலுகாவில், ஹோட்டல்களில் துாய்மை இல்லை. உணவும் தரமாக இல்லை என, சுற்றுலா பயணியர் மற்றும் பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தது.
எனவே, உணவுத்துறை அதிகாரிகள் நேற்று சமையல் அறை, உணவு தயாரிக்கும் முறை, தண்ணீரின் தரத்தை சோதனையிட்டனர். சில ஹோட்டல்களில் துாய்மை இருக்கவில்லை. உணவும் தரமானதாக இருக்கவில்லை. இத்தகைய ஹோட்டல்களுக்கு, அதிகாரிகள் நோட்டீஸ் அளித்து எச்சரித்தனர்.
'மடிகேரிக்கு பெருமளவில் சுற்றுலா பயணியர் வருகின்றனர். இவர்களுக்கு தரமான, துாய்மையான உணவு கிடைக்க வேண்டும். சமையல் ஊழியர்கள் தலைக்கு கேப் அல்லது ஸ்கார்ப் அணிய வேண்டும். இல்லாவிட்டால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்தனர்.
