தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பழங்குடியினருக்கு வழங்கிய உணவு பொருட்கள் நிறுத்தம்

 பழங்குடியினருக்கு வழங்கிய உணவு பொருட்கள் நிறுத்தம்

 பழங்குடியினருக்கு வழங்கிய உணவு பொருட்கள் நிறுத்தம்


ADDED : செப் 27, 2026 11:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 11:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாம்ராஜ்நகர்: பழங்குடியின மக்களுக்கு, மாநில அரசு வழங்கி வந்த உணவு பொருட்கள், ஆறு மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உணவுக்கு வழியில்லாமல், பழங்குடியினர் அவதிப்படுகின்றனர்.

சாம்ராஜ்நகர் மாவட்டம், கர்நாடகாவிலேயே மிக அதிகமாக பழங்குடியினர் வசிக்கும் மாவட்டமாகும்.

இம்மாவட்டத்தின் வனப்பகுதிக்குள் வசிக்கும் பழங்குடியின மக்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கில், பழங்குடியினர் நலத்துறை சார்பில், மாதந்தோறும் உணவு கிட் வழங்கப்படுகிறது.

இந்த கிட்களில் முட்டை, கேழ்வரகு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, நெய் உட்பட பல்வேறு பொருட்கள் இருக்கும்.

கூலி வேலையும் செய்ய வாய்ப்பில்லாத, சரியான பாதைகள் இல்லாத அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின குடும்பங்களுக்கு, அரசு வழங்கும் உணவு பொருட்கள், மிகவும் உதவியாக இருந்தன. கடந்த ஆறு மாதங்களாக, பழங்குடியினருக்கு உணவு பொருட்கள் வினியோகிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன் அளிக்கப்பட்ட டெண்டர் காலம் முடிந்துள்ளது. எனவே அந்த ஒப்பந்ததாரர் உணவு பொருட்கள் வினியோகிப்பதை நிறுத்திவிட்டார். புதிதாக டெண்டர் அழைக்கப்படாததால், உணவு தானியங்கள் கிடைக்காமல் பழங்குடியினர் பரிதவிக்கின்றனர்.

குழந்தைகள், மூத்த குடிமக்கள் என, பலரும் ஒரு வேளை உணவும் இல்லாமல் பரிதவிக்கின்றனர். மாநில அரசு உடனடியாக தலையிட்டு, டெண்டர் முடிவு செய்து, உணவு பொருட்கள் வழங்க வேண்டும் என, வலியுறுத்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us