/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
/
சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
ADDED : ஜூலை 16, 2025 10:59 PM

மாதநாயக்கனஹள்ளி: திருமண ஆசை காட்டி சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹாசனை சேர்ந்தவர் தீபு, 26. பெங்களூரு ரூரல் மாதநாயக்கனஹள்ளியில் வாடகை வீட்டில் தங்கி இருந்து ஆட்டோ ஓட்டினார்.
இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் தம்பதியின், 16 வயது மகளான சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, கடந்த நான்கு மாதத்தில் சிறுமியுடன் தீபு பல முறை உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் சில தினங்களாக சிறுமிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வயிறு வலிப்பதாக தாயிடம் கூறினார். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.
அதிர்ச்சி அடைந்த தாய் விசாரித்தபோது, தீபு தான் காரணம் என்று தெரிந்தது. மாதநாயக்கனஹள்ளி போலீசில் சிறுமியின் தாய், நேற்று முன்தினம் புகார் செய்தார். போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீசார் தீபுவை கைது செய்தனர்.