15 கி.மீ.,க்கு ரூ.1,200 வசூல் ஆட்டோ ஓட்டுநர் அடாவடி
15 கி.மீ.,க்கு ரூ.1,200 வசூல் ஆட்டோ ஓட்டுநர் அடாவடி
ADDED : மே 06, 2026 11:48 PM
பெங்களூரு: மழை நேரத்தில், ஒரு பெண், 15 கி.மீ., துாரம் பயணிக்க, அவரிடம் ஆட்டோ ஓட்டுநர், 1,200 ரூபாய் கட்டணம் வசூலித்துள்ளார்.
இது குறித்து சான்யா சிங் என்பவர் இன்ஸ்டாகிராமில் நேற்று கூறியிருப்பதாவது:
என் தோழி ஒருவர், நேற்று (முன் தினம்) தன் இருப்பிடத்துக் கு செல்ல, ஆட்டோவில் பயணித்தார். அப்போது மழை பெய்ததால் 15 கி.மீ., பயணிக்க, 1,200 ரூபாய் கட்டணம் கொடுத்து உள்ளார். இந்த பணத்தில் நாம் இரண்டு முறை, வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கலாம்.
என் தோழி வீட்டை சென்றடைய, மூன்று மணி நேரமானது. ஆட்டோ ஓட்டுநர் வழியில் இறக்கி விட்டு விடக்கூடாது என்பதால், அவர் கேட்டபடி 1,200 ரூபாயை என் தோழி கொடுத்துள்ளார்.
இதனால், மழையை நம்மால் ரசிக்க முடிவதில்லை. பெங்களூரில் வயலின் சத்தத்தை விட, வாகன ஹார்ன் சத்தம் அதிகம் கேட்கிறது. இங்கு கல்லுாரியில் அட்மி ஷன் பெறுவதை விட, வாகனம் புக்கிங் செய்வது கஷ்டமான வேலையாகும். நமது எதிர்காலம் வளமாகிறதோ, இல்லையோ. ஆனால் ஆட்டோ ஓட்டுநர்கள் பணக்காரர்கள் ஆகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
