/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மெட்ரோ ரயில் சிமென்ட் ஸ்லாப் விழுந்து ஆட்டோ ஓட்டுநர் பலி
/
மெட்ரோ ரயில் சிமென்ட் ஸ்லாப் விழுந்து ஆட்டோ ஓட்டுநர் பலி
மெட்ரோ ரயில் சிமென்ட் ஸ்லாப் விழுந்து ஆட்டோ ஓட்டுநர் பலி
மெட்ரோ ரயில் சிமென்ட் ஸ்லாப் விழுந்து ஆட்டோ ஓட்டுநர் பலி
ADDED : ஏப் 16, 2025 11:30 PM

கோகிலு: பெங்களூரு கோகிலுவில் லாரியில் இருந்த மெட்ரோ ரயில் பணிக்கான பிரமாண்ட சிமென்ட் ஸ்லாப், ஆட்டோ மீது விழுந்ததில், அதில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
சிக்கபல்லாபூர் மாவட்டம், சித்லகட்டாவை சேர்ந்தவர் காசிம் சாப், 35. இவர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களூரில் ஆட்டோ ஓட்டி வருகிறார். எலஹங்காவில் வசித்து வந்தார். வழக்கம் போல், நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு எலஹங்காவில் இருந்து பயணியருடன் ஆட்டோவில் கோகிலுக்கு வந்தார்.
ஆட்டோவில் இருந்து பயணி இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது மெட்ரோ ரயில் பணிக்காக, ரெடிமேடாக தயாரிக்கப்பட்ட பெரிய சிமென்ட் ஸ்லாப் ஏற்றிய லாரி, 'யூ டர்ன்' அடித்தது. அப்போது லாரியில் இருந்த ஸ்லாப் கீழே விழுவதை பயணி பார்த்தார். உடனடியாக ஆட்டோ ஓட்டுநருக்கு தெரிவித்தார்.
அவர் இறங்குவதற்குள், ஆட்டோ மீது பிரமாண்ட ஸ்லாப் விழுந்து நசுக்கியது. இதை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக அங்கு சென்று அவரை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால், சிமென்ட் ஸ்லாப்பின் எடை அதிகமாக இருந்ததால் காப்பாற்ற முடியவில்லை.
இரண்டு மணி நேரம் கழித்து பொக்லைன் இயந்திரத்துடன் போக்குவரத்து போலீசார் அங்கு வந்தனர். ஸ்லாப்பை அகற்றியபோது, ஆட்டோவுடன் ஓட்டுநர் காசிம் சாப் உடல் நசுங்கி உயிரிழந்திருந்தார்.
மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த விபத்து நடந்ததாக பொது மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். விபத்து நடந்தவுடன், லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். எலஹங்கா போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.