ADDED : செப் 10, 2026 11:03 PM
தட்சிண கன்னடா: மங்களூரில். பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரின் புத்துார் கிராமப்புற போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பெண், நேற்று முன்தினம் காலை பணிக்கு செல்ல, தனக்கு தெரிந்த ஆட்டோ ஓட்டுநர் பாகிருஷ்ணா என்பவரின் ஆட்டோவில் சென்றார்.
புத்துார் நோக்கி சென்ற ஆட்டோ, திடீரென வழிமாறி, குரியா என்ற இடத்தை நோக்கி சென்றது. இதை பார்த்த பெண், ஏன் வேறு வழியில் செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்குள் ஆட்டோ டிரைவர் பாலகிருஷ்ணா, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்தி, அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அவரிடம் தப்பித்த பெண், புத்துார் கிராமப்புற போலீசில் புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசார், சந்தியா பர்பூஞ்சா அருகில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த பாலகிருஷ்ணாவை நேற்று கைது செய்துவிசாரிக்கின்றனர்.
