ADDED : செப் 10, 2026 11:03 PM
பெங்களூரு: கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தொடர், வரும் 21ம் தேதி துவங்குகிறது. மூன்று நாட்கள் நடக்கிறது.
கர்நாடகாவில் நிலவும் வறட்சி, மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாப்பது தொடர்பான, 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கஸ்துாரிரங்கன் சமர்ப்பித்துள்ள அறிக்கை தொடர்பாக, மத்திய அரசு வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, செப்டம்பர் 21ம் தேதி முதல், மூன்று நாட்களுக்கு சிறப்பு சட்டசபை கூட்டத்தொடரை நடத்த, கடந்த வாரம் கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில் சட்டசபை செயலர் விசாலாட்சி நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'கர்நாடக சட்டசபையின், 10வது கூட்டத்தொடர், வரும் 21ம் தேதி காலை 11:00 மணிக்கு, விதான் சவுதாவில் உள்ள சட்டசபை அரங்கில் கூடுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது' என, கூறப்பட்டுள்ளது.
