/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆட்டோ டிரைவர் குத்தி கொலை கே.பி.அக்ரஹாராவில் பயங்கரம்
/
ஆட்டோ டிரைவர் குத்தி கொலை கே.பி.அக்ரஹாராவில் பயங்கரம்
ஆட்டோ டிரைவர் குத்தி கொலை கே.பி.அக்ரஹாராவில் பயங்கரம்
ஆட்டோ டிரைவர் குத்தி கொலை கே.பி.அக்ரஹாராவில் பயங்கரம்
ADDED : ஜன 02, 2026 05:58 AM

கே.பி.அக்ரஹாரா: கே.பி.அக்ரஹாராவில் ஆட்டோ டிரைவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலை சேர்ந்தவர் ரேச்சண்ணா, 27. இவர், தன் தாயுடன் பெங்களூரு கே.பி.அக்ரஹாராவில் பல ஆண்டுகளாக வசித்தார்.
வெள்ளி நகைகள் தயாரிக்கும் பட்டறையில் வேலை செய்தார். கடந்த, 15 நாட்களுக்கு முன் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வந்தார்.
புத்தாண்டை ஒட்டி நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் சேர்ந்து, மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்தார்.
இரவு, 11:45 மணியளவில் அவரது மொபைல் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. போனில் பேசியபடியே வீட்டில் இருந்து வெளியே வந்தார். வீட்டின் முன் நின்று பேசி கொண்டு இருந்தார். அங்கு வந்த மர்மநபர்கள், ரேச்சண்ணா முதுகில் கத்தியால் இரண்டு முறை குத்திவிட்டு தப்பினர்.
பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த அவர், ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள், குடிபோதையில் ரேச்சண்ணா கீழே விழுந்து கிடப்பதாக நினைத்து கொண்டனர். அதிகாலை, 1:00 மணியளவில், அந்த வழியாக சென்ற சிலர் பார்த்த போது, ரேச்சண்ணா இறந்தது தெரிந்தது.
அவரை கொலை செய்தது யார், என்ன காரணம் என்று தெரியவில்லை. அவர் கடைசியாக யார், யாரிடம் மொபைல் போனில் பேசினார் என்ற தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். தமிழர்கள் அதிகம் வசிக்கும் கே.பி.அக்ரஹாராவில் நடந்திருக்கும், இந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

