/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பணத்தை ஒப்படைத்து ஆட்டோ ஓட்டுநர் நெகிழ்ச்சி
/
பணத்தை ஒப்படைத்து ஆட்டோ ஓட்டுநர் நெகிழ்ச்சி
ADDED : நவ 16, 2025 11:46 PM

பெங்களூரு: தனது ஆட்டோவில் பணத்தை மறந்துவிட்டு சென்ற பயணியை தேடி கண்டுபிடித்து பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
பெங்களூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் சாலையில் நின்று சண்டை போடும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாவது வழக்கமாகி விட்டது. ஆட்டோ ஓட்டுநர்களே இப்படித்தான என நினைக்கக்கூடிய நிலை உருவாகி விட்டது.
இந்த நிலையை மாற்றும் வகையில், கலபுரகி மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜு செய்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்து உள்ளது. இவர், பெங்களூரில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது ஆட்டோவில் சில நாட்களுக்கு முன் பயணித்த பயணி ஒருவர், தனது பையை ஆட்டோவில் மறந்து வைத்து விட்டு சென்று உள்ளார்.
இதை அறிந்த ஓட்டுநர் ராஜு அந்த பையை திறந்து பார்த்தார். பையில் அதிகளவு பணமும், மொபைல் எண்ணும் இருந்தது. மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசி அனைத்து விபரத்தையும் கூறினார். பையை தொலைத்தவர் எங்கு இருக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டார்.
அந்நபர் இருக்கும் இடத்திற்கே சென்று, பையை அவரிடம் ஒப்படைத்தார். இதை பார்த்த அந்நபர், ஆனந்த கண்ணீர் வடித்தார். இந்த கலியுகத்தில் இப்படி ஒரு நபரா என்பது போல, அவரை கட்டி அணைத்து நன்றி கூறினார்.
இச்சம்பவத்தை வீடியோவாக எடுத்து இணையத்திலும் பதிவேற்றினார். இந்த வீடியோ அதிக நபர்களால் பகிரப்பட்டு வருகிறது. ஆட்டோ ஓட்டுநர் ராஜுவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

