தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஆட்டோ கட்டணம் உயர்வு ஓட்டுநர் சங்கம் வலியுறுத்தல்

ஆட்டோ கட்டணம் உயர்வு ஓட்டுநர் சங்கம் வலியுறுத்தல்

ஆட்டோ கட்டணம் உயர்வு ஓட்டுநர் சங்கம் வலியுறுத்தல்


ADDED : மே 01, 2025 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2025 05:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'பஸ் டிக்கெட் கட்டணம், அத்தியாவாசிய பொருட்கள் விலை உயர்வு உட்பட பல்வேறு காரணங்களால், ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும்' என, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் வற்புறுத்தி வருகின்றனர்.

கர்நாடகா மாநில அரசு, நடப்பாண்டு பஸ் கட்டணம், பால், குடிநீர், மின்சாரம் என அனைத்தையும் ஏற்றி உள்ளது. ஆனால் மூன்று ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை என்று ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

அவர்கள் கூறியதாவது:

பெட்ரோல் உட்பட அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து விட்டன. எங்கள் ஆட்டோ கட்டணத்தை உயர்த்தும்படி 2023ம் ஆண்டு முதல் வலியுறுத்தி வருகிறோம்.

இது தொடர்பாக பெங்களூரு நகர மாவட்ட கலெக்டருடன் இரண்ட முறை கூட்டம் நடத்தியும், எந்த முடிவும் எட்டப்படவில்லை.

அதேவேளையில் நடப்பாண்டு மார்ச் மாதத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று அரசு கூறியிருந்தது. அறிவிப்பும் வரவில்லை.

தற்போது குறைந்தபட்ச கட்டணமாக, முதல் 2 கி.மீ.,க்கு 30 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதை முதல் இரண்டு கி.மீ.,க்கு 40 ரூபாயாகவும்; அடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கு 15 முதல் 20 ரூபாய் வரை உயர்த்த வேண்டும். இதற்கான உத்தரவை அரசு அறிவிக்க வேண்டும்.

மீட்டருக்கு மேல் பணம் கேட்டால், ஆட்டோ ஓட்டுநருக்கும், பயணியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஷிவமொக்கா, தட்சிண கன்னடாவின் மங்களூரு, உடுப்பி மாவட்டங்களில் ஏற்கனவே ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. அதுபோன்று பெங்களூரிலும் உயர்த்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us