/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பைக் டாக்சிகளுக்கு விதிமுறை ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை
/
பைக் டாக்சிகளுக்கு விதிமுறை ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை
பைக் டாக்சிகளுக்கு விதிமுறை ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை
பைக் டாக்சிகளுக்கு விதிமுறை ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை
ADDED : ஜன 27, 2026 04:50 AM
பெங்களூரு: பல நாட்கள் சட்ட போராட்டத்துக்கு பின், கர்நாடகாவில் ஊபர், ராபிடோ உட்பட, பல்வேறு நிறுவனங்களின் பைக் டாக்சிகளுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதை முன்னிட்டு, ஆட்டோ ஓட்டுநர்கள், வைத்துள்ள கோரிக்கைகள் அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன் கர்நாடகாவில், ஊபர், ரேபிடோ என, பல நிறுவனங்கள் பைக் டாக்சிகளை இயக்கின. இது பயணியருக்கு உதவியாக இருந்தது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில், வாடகை கார்களில் பயணிப்பதை விட, பைக் டாக்சியில் செல்வது எளிது. ஆட்டோ ஓட்டுநர்கள், வாடிக்கையாளர்கள் அழைக்கும் இடத்துக்கு வருவது இல்லை. மீட்டர் போடாமல் தங்கள் விருப்பப்படி கட்டணம் வசூலிக்கின்றனர். இதே காரணத்தால், பலரும் பைக் டாக்சிகளை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டினர்.
இதனால் தங்களின் வருவாய்க்கு பாதிப்பு வருவதாக, ஆட்டோ ஓட்டுநர்கள் நெருக்கடி கொடுத்ததால், பைக் டாக்சிகளுக்கு போக்குவரத்து துறை தடை விதித்தது.
இதை எதிர்த்து பைக் டாக்சி நிறுவனங்கள், கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடின. நீதிமன்றமும் பைக் டாக்சிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அரசிடம் பல கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
'ஆட்டோ பைக் டாக்சிகளுக்கு, மஞ்சள் போர்டை கட்டாயமாக்க வேண்டும். ஒயிட் போர்டு வைத்துள்ள பலரும், பைக் டாக்சி ஓட்டுகின்றனர்.
'இவர்களுக்கு மஞ்சள் போர்டு பொருத்தும்படி சட்டம் கொண்டு வாருங்கள். சாதாரண பைக்குகளுக்கும், பைக் டாக்சிகளுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.
'பைக் டாக்சிகளின் நிறத்தை மாற்ற வேண்டும்.இதனால் பைக் டாக்சிகளை எளிதாக அடையாளம் காணலாம். இந்த டாக்சிகளுக்கு வர்த்தக வரி விதிக்க வேண்டும். ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிவதை, சீருடை அணிவதை கட்டாயமாக்க வேண்டும்' என கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைகள், அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

