/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தின்ன தின்ன திகட்டாத அவல் தயிர் சாதம்
/
தின்ன தின்ன திகட்டாத அவல் தயிர் சாதம்
ADDED : நவ 22, 2025 05:03 AM

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, மதிய உணவாக என்ன கொடுத்து விடலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்படி என்றால் அவலில் செய்யப்படும் தயிர் சாதம் உங்களுக்காக தான். பொதுவாக தயிர் சாதம் என்றால், சாதத்தில் தயிரை ஊற்றி கலந்து சாப்பிடுவது; தயிர், கொத்தமல்லி இலையை தாளித்து சாதத்துடன் கலந்து சாப்பிடுவது என்று தான் நினைத்துக் கொண்டு இருப்போம். ஆனால் அவலில் கூட சூப்பரான தயிர் சாதம் செய்யலாம். அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல், குறைந்த நேரத்தில் செய்ய கூடியதாகவும் உள்ளது.
தேவையான பொருட்கள்
l இரண்டு கப் அவல்
l இரண்டு கப் தயிர்
l அரை கப் மோர்
l பொடிசாக நறுக்கிய பச்சை மிளகாய் தேவையான அளவு
l ஒரு டீஸ்பூன் துருவிய இஞ்சி
l சமையல் எண்ணெய், உப்பு தேவையான அளவு
l இரண்டு காய்ந்த மிளகாய்
l ஒரு கொத்து கறிவேப்பிலை
l ஒரு டீஸ்பூன் உளுந்தம்பருப்பு
l இரண்டு டீஸ்பூன் துருவிய மாங்காய்
l அரை டீஸ்பூன் பெருங்காய பவுடர்
l இரண்டு டீஸ்பூன் துருவிய வெள்ளரிக்காய்
l கால் கப் மாதுளை பழம்
செய்முறை
அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 15 முதல் 20 நிமிடங்கள் நன்கு ஊற வைக்கவும். பின், அவலில் இருக்கும் தண்ணீரை நன்கு பிழிந்து, அவலை தனியாக எடுத்துக் கொள்ளவும். இதனுடன் தயிர், மோர் சேர்த்து நன்கு கலந்து, பெருங்காய பவுடர், துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அடுப்பை ஆன் செய்து வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அவலில் கலந்து விடவும். பின், துருவிய மாங்காய், வெள்ளரிக்காய், மாதுளை பழம் சேர்த்து நன்கு கலந்து விடவும். சுவையான அவல் தயிர் சாதம் தயார்.
மதிய உணவுக்கு கொடுத்துவிட்டால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். மீண்டும், மீண்டும் செய்து கொடுக்கும்படி கேட்பர்.
- நமது நிருபர் -

