தாய் இறந்தது தெரியாமல் குட்டி யானை பாச போராட்டம்
தாய் இறந்தது தெரியாமல் குட்டி யானை பாச போராட்டம்
ADDED : மே 13, 2026 03:23 AM

அ நிறம் | அளவு
ராம்நகர்: தாய் இறந்தது தெரியாமல், குட்டி யானை பாச போராட்டம் நடத்தியது வனத்துறையினர் கண்களை கலங்க வைத்தது.
ராம்நகரின் முக்கூர் வனப்பகுதியில், நேற்று காலை வன ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதிக்குள் பெண் யானை இறந்து கிடந்ததை பார்த்தனர்.
அதன் அருகில் நின்ற குட்டி யானை, தன் தும்பிக்கையால் தாய் யானையை தடவி கொடுத்து எழுப்ப முயன்று பாச போராட்டம் நடத்தியதை பார்த்து கண் கலங்கினர்.
உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள் இறந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.
உடல் நலக்குறைவால் பல உறுப்புகள் செயலிழந்து யானை இறந்ததும், அதற்கு, 35 வயது என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். குட்டி யானையை மீட்ட வனத்துறையினர் முகாமுக்கு அழைத்து சென்றனர்.
