தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மாடியில் இருந்து விழுந்தும் உயிர் பிழைத்த பெண் குழந்தை

 மாடியில் இருந்து விழுந்தும் உயிர் பிழைத்த பெண் குழந்தை

 மாடியில் இருந்து விழுந்தும் உயிர் பிழைத்த பெண் குழந்தை


ADDED : ஏப் 10, 2026 04:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2026 04:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாயண்டஹள்ளி: விளையாடி கொண்டிருந்த போது, வீட்டின் முதல் மாடியில் இருந்து விழுந்த, ஒன்றரை வயது பெண் குழந்தை, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

பெங்களூரு நாயண்டஹள்ளியில் வசிப்பவர் நவீன். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஜெயஸ்ரீ. தம்பதிக்கு ஒன்றரை வயதில் சஹானா என்ற மகள் உள்ளார். தம்பதி, மகளுடன் வாடகை வீட்டில் முதல் மாடியில் வசிக்கின்றனர்.

கடந்த, 7ம் தேதி மாலை வீட்டின் பால்கனி பகுதியில், சஹானா விளையாடி கொண்டு இருந்தார். ஜெயஸ்ரீயும் அங்கு தான் இருந்தார். அடுப்பில் பாலை கொதிக்க வைத்து விட்டு வந்தது, ஜெயஸ்ரீக்கு நினைவு வந்தது. இதனால், அடுப்பை அணைக்கச் சென்றார்.

இந்த நேரத்தில் பால்கனியில் உள்ள கம்பி மீது ஏறிய, சஹானா தலைக்குப்புற சாலையில் விழுந்தார். அந்த வழியாக நடந்து சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறினர்.

ஜெயஸ்ரீ வெளியே வந்து பார்த்த போது, குழந்தை மயங்கி கிடந்தது. குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு, அவரும் மயங்கி விழுந்தார். தாய், மகளை அப்பகுதி மக்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.

அதிர்ஷ்டவசமாக குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை. தலையில் சிறிய தையல் மட்டும் போடப்பட்டு உள்ளது. குழந்தையின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று டாக்டர் கூறி உள்ளார்.

ஜெயஸ்ரீயின் உடல்நிலையும் தேறி வருகிறது. மாடியில் இருந்து குழந்தை விழுந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us