ADDED : ஏப் 13, 2026 01:16 AM
அ நிறம் | அளவு
குடகு: குடகு மாவட்டம், விராஜ்பேட் தாலுகாவின், பேத்ரி கிராமத்தில் காபி தோட்டம் உள்ளது. நேற்று முன்தினம் மதியம் இந்த தோட்டத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டது.
அப்பகுதியினர் சென்று தேடிய போது, பாக்கு மட்டையில் சுற்றப்பட்டு பச்சிளம் பெண் குழந்தை இருந்தது கண்டறியப்பட்டது.
இதைக்கண்ட கிராமத்தினர், குழந்தைக்கு பால் புகட்டி பராமரித்தனர். உடனடியாக குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள், குழந்தையை மீட்டனர். மயக்க நிலையில் இருந்ததால், மடிகேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பிறந்து சில மணி நேரமே ஆன, பச்சிளம் குழந்தையை காபி தோட்டத்தில் போட்ட பெற்றோரை, போலீசார் தேடி வருகின்றனர். சுற்றுப்புற மருத்துவமனைகளில் பிரசவித்த பெண்களை பற்றிய தகவலை சேகரிக்கின்றனர்.
