தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பாகல்கோட் இடைத்தேர்தல்: காங்.,கில் 3 பேர் நீக்கம்

 பாகல்கோட் இடைத்தேர்தல்: காங்.,கில் 3 பேர் நீக்கம்

 பாகல்கோட் இடைத்தேர்தல்: காங்.,கில் 3 பேர் நீக்கம்


ADDED : ஏப் 28, 2026 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2026 04:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகல்கோட்: தாவணகெரே தெற்கு தொகுதி இடைத்தேர்தலில், கட்சிக்கு எதிராக செயல்பட்ட குற்றச்சாட்டின் பேரில், எம்.எல்.சி., அப்துல் ஜப்பார் உட்பட பலர் மீது காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.

அப்துல் ஜப்பாரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது, நசீர் அகமதுவை முதல்வரின் அரசியல் செயலர் பதவியில் இருந்து நீக்கியது, கட்சியில் சூறாவளியை கிளப்பியது. காங்கிரஸ் மீது முஸ்லிம் தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இதற்கிடையில் பாகல்கோட் இடைத்தேர்தலிலும், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக, மூவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பாகல்கோட் மாவட்ட கூட்டுறவு வங்கியின் முன்னாள் துணைத்தலைவர் முருகேஷ் கட்லிமட்டி, கமதகி பட்டண பஞ்சாயத்து கவுன்சிலர்கள் குரு பாட்டீல், ரமேஷ் ஜமகன்டி ஆகியோர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக, பிரசாரம் செய்யவில்லை.

கட்சியின் ஒழுங்கை மீறி நடந்து கொண்டனர். இதற்கு விளக்கம் கேட்டு பிளாக் காங்கிரஸ் கமிட்டி, நோட்டீஸ் அளித்தது. இவர்கள் அளித்த விளக்கம் திருப்தியாக இல்லை என, மாவட்ட கமிட்டிக்கு, பிளாக் கமிட்டி புகார் அளித்தது.

மூவரும் கட்சிக்கு எதிராக செயல்பட்டது தெரிந்ததால், இவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி, மா வட்ட காங்கிரஸ் தலைவர் நஞ்சய்யமடா நேற்று உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us