sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பாலகிருஷ்ணா தோற்கலாம்  ராஜண்ணா அதிரடி பேட்டி

 பாலகிருஷ்ணா தோற்கலாம்  ராஜண்ணா அதிரடி பேட்டி

 பாலகிருஷ்ணா தோற்கலாம்  ராஜண்ணா அதிரடி பேட்டி


ADDED : மார் 02, 2026 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 05:38 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துமகூரு: ''அடுத்த தேர்தலில் சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா தோற்று போகலாம்,'' என்று, சித்தராமையா ஆதரவாளர் ராஜண்ணா கூறினார்.

துமகூரு மதுகிரியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

மாகடி எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா தனது பிறந்தநாளை ஒட்டி, சில எம்.எல்.ஏ.,க்களுக்கு இரவு விருந்து கொடுத்து உள்ளார். என்னை அவர் அழைக்கவில்லை. அழைப்பு வந்திருந்தால் கண்டிப்பாக சென்று இருப்பேன். விருந்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் சிவகுமார் தரப்பு ஆதரவாளர்களா என்று எனக்கு தெரியாது.

விருந்தில் பங்கேற்ற பாவகடா எம்.எல்.ஏ., வெங்கடேஷ் எங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர். நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். அடுத்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது கடினம் என்று பாலகிருஷ்ணா கூறி உள்ளார். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி. ஒருவேளை, பாலகிருஷ்ணா தோற்று போகலாம்.

கடந்த தேர்தலில் நாங்கள் 137 இடங்களில் வென்றோம். மற்ற இடங்களில் எதிர்க்கட்சிகள் வென்றன. ஒரு முறை வெற்றி பெற்றவர்கள், அடுத்த முறை தோற்பது அரசியலில் சகஜம். முதல்வர் பதவி விவகாரத்தில் நிலவும் குழப்பத்தால், கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று, மேலிட தலைவர்களிடம் நான் கூறியது உண்மை தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us