/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் பல்லாரி நகை கடையில் சோதனை
/
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் பல்லாரி நகை கடையில் சோதனை
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் பல்லாரி நகை கடையில் சோதனை
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் பல்லாரி நகை கடையில் சோதனை
ADDED : டிச 25, 2025 06:45 AM
பல்லாரி: சபரிமலை அய்யப்பன் கோவில் நகை மாயமான வழக்கில், பல்லாரியில் உள்ள ரோட்டம் ஜூவல்லரி நகை கடையில், கேரள எஸ்.ஐ.டி., போலீசார் நேற்று 2வது முறையாக சோதனை நடத்தினர்.
கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோவிலில், துவார பாலகர்கள் சிலை மீது பதிக்கப்பட்டிருந்த 4 கிலோ தங்க தகடுகள் மாயமானது குறித்து, கேரள எஸ்.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர். இவ்வழக்கில் பெங்களூரு ஸ்ரீராமபுரத்தில் வசிப்பவரும், கேரளாவை சேர்ந்தவருமான உன்னிகிருஷ்ணன் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார்.
இவரிடம் நடத்திய விசாரணையில், பல்லாரி டவுனில் உள்ள ரோட்டம் ஜூவல்லரி நகை கடை உரிமையாளர் கோவர்த்தனிடம், 476 கிராம் நகை கொடுத்ததாக கூறினார். இதையடுத்து அந்த நகை கடையில் அக்டோபர் 25ம் தேதி, கேரள எஸ்.ஐ.டி., அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால் எதுவும் சிக்கவில்லை.
இந்த வழக்கில் சில தகவல்கள் அடிப்படையில், கடந்த 19ம் தேதி கோவர்த்தன் கைது செய்யப்பட்டார். நேற்று அவரது நகை கடையில், எஸ்.ஐ.டி., அதிகாரிகள் இரண்டாவது முறையாக சோதனை நடத்தினர். ஷட்டர் கதவை மூடிவிட்டு கடைக்குள் நடத்திய சோதனையின் போது, நகை கடை ஊழியர்களிடடும் விசாரித்து தகவல் பெற்றனர்.

