தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பல்லாரி கலவர வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற முடியாது: முதல்வர் சித்து உறுதி

 பல்லாரி கலவர வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற முடியாது: முதல்வர் சித்து உறுதி

 பல்லாரி கலவர வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற முடியாது: முதல்வர் சித்து உறுதி


ADDED : ஜன 19, 2026 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2026 06:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: ''பல்லாரி கலவரம் குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்ற பா.ஜ.,வின் கோரிக்கையை ஏற்க முடியாது,'' என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து, நேற்று மைசூரில் அவர் அளித்த பேட்டி:

பல்லாரி கலவர வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என்ற பா.ஜ.,வின் கோரிக்கை ஏற்க முடியாது. சி.பி.ஐ., விசாரணை கோருவதற்கு பா.ஜ.,விற்கு என்ன தார்மீக உரிமை உள்ளது. பா.ஜ., ஆட்சி காலத்தில் ஒரு வழக்கு கூட சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கப்படவில்லை.

சி.பி.ஐ., விசாரணை கோருவது அரசியல் உள்நோக்கம் கொண்டது. எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த உரிமை உண்டு. அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் நான் பதில் அளிப்பேன். நான் முதல்வராக இருந்த காலத்தில், லாட்டரி வழக்கு, தர்மஸ்தலா சவுஜன்யா வழக்கு, அப்போதைய உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்து உள்ளேன்.

ஜனார்த்தன ரெட்டி ஒரு ரவுடி. அவரிடமிருந்து கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை. ஜனநாயகம், அரசியலமைப்பின் மீது மட்டுமே காங்கிரசுக்கு நம்பிக்கை உள்ளது. பல்லாரியில் பா.ஜ., நடத்திய பொதுக்கூட்டம் அரசியல் ஆதாயங்களை உள்ளடக்கியது. யார் ஊழல் செய்தாலும் கட்டாய நடவடிக்கை எடுக்கப்படும். கலால் துறையில் அதிகாரிகள் லஞ்சம் கேட்டதில் அமைச்சருக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து, எனக்கு எதுவும் தெரியாது. வரும் 22ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடக்கும் சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us