/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோவிலுக்குள் நுழைய தலித்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
/
கோவிலுக்குள் நுழைய தலித்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
கோவிலுக்குள் நுழைய தலித்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
கோவிலுக்குள் நுழைய தலித்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
ADDED : ஜூலை 05, 2025 10:56 PM
தொட்டபல்லாபூர்: தாசில்தார், டி.எஸ்.பி., நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, கோவிலுக்குள் தலித்கள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூர் தாலுகாவில் உள்ள கூளியா கிராமம்.
இந்த கிராமத்தில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட, ஏகலம்பா தேவி கோவில் உள்ளது. இங்கு ஒரு சமூகத்தினர் மட்டும், வழிபாடு செய்து வந்தனர்.
பல ஆண்டுகளாக தலித் சமூகத்தினருக்கு, சாமி தரிசனம் செய்ய அனுமதி கொடுக்கப்படவில்லை. இதுபற்றி பல முறை, அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை.
நேற்று முன்தினம் தலித் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர், கோவிலுக்கு சென்றுள்ளார். அவரை சிலர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
அதிர்ச்சி அடைந்த அவர், போலீசில் புகார் செய்தார். தன்னை கோவிலில் நுழைய அனுமதிக்காதது பற்றி, தொட்டபல்லாபூர் தாசில்தார் வித்யா ராத்தோடிடம் புகாரும் கொடுத்தார்.
இந்நிலையில் நேற்று காலை கூளியா கிராமத்திற்கு தாசில்தார் வித்யா ராத்தோட், டி.எஸ்.பி., ரவி ஆகியோர் மற்றும் அதிகாரிகளும் போலீசாரும் சென்றனர். இரு சமூக மக்களையும் அழைத்து பேச்சு நடத்தினர்.
ஜாதியை 'காரணம் காட்டி, தலித் மக்களை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்காமல் இருப்பது சரியல்ல.
'இதுபோன்று தொடர்ந்து செய்தால் கைது செய்யப்படுவீர்கள்' என, ஒரு சமூகத்தினருக்கு தாசில்தார் எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து தலித் சமூகத்தினரை கோவிலுக்குள் அனுமதிக்க, அவர்கள் சம்மதித்தனர்.
பல ஆண்டுகளாக கோவிலுக்குள் செல்ல இருந்த தடை நீக்கியதால் கூளியா கிராமத்தில் வசிக்கும் தலித் சமூகத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.