ADDED : செப் 30, 2026 11:07 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு: பெங்களூரில் நாளை, காந்தி ஜெயந்தி நாளில், இறைச்சி விற்பனைக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்திற்கு உட்பட்ட ஐந்து மாநகராட்சிகளிலும், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை இறைச்சி விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இறைச்சி கூடங்களில் விலங்குகளை வெட்டுவது, இறைச்சி விற்பனை ஆகியவற்றுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது.
இதை அனைத்து இறைச்சி விற்பனையாளர்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஜி.பி.ஏ., தெரிவித்து உள்ளது.
