/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விநாயகர் சதுர்த்தியன்று இறைச்சி விற்பனைக்கு தடை
/
விநாயகர் சதுர்த்தியன்று இறைச்சி விற்பனைக்கு தடை
ADDED : ஆக 26, 2025 02:57 AM
பெங்களூரு: பெங்களூரில் விநாயகர் சதுர்த்தி அன்று இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் களைகட்ட துவங்கி உள்ளன. பல இடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடக்கின்றன. இது ஒரு புறம் இருக்க, சிலைகளை கரைப்பதற்கான இடங்கள் தேர்வு, ஏற்பாடுகள், போலீஸ் பாதுகாப்பு போன்றவையும் நடந்து வருகின்றன.
இந்நிலையில், பெங்களூரு மாநகராட்சியின் கால்நடை பராமரிப்பு பிரிவு நேற்று மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இதன்படி, பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் எக்காரணம் கொண்டும் விநாயகர் சதுர்த்தி அன்று இறைச்சிகளுக்காக விலங்குகள், கோழிகளை வெட்டக்கூடாது. இறைச்சி விற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.