தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காதலர் தினத்தன்று நந்திமலைக்கு செல்ல தடை

 காதலர் தினத்தன்று நந்திமலைக்கு செல்ல தடை

 காதலர் தினத்தன்று நந்திமலைக்கு செல்ல தடை


ADDED : பிப் 07, 2026 06:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 06:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்கபல்லாபூர்: காதலர் தினத்தன்று, நந்திமலைக்கு செல்ல தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

பெங்களூருக்கு அருகேயுள்ள சுற்றுலா தலங்களில், மிகவும் பிரபலமானது நந்திமலை. சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள நந்திமலைக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பைக்குகளிலேயே வருகின்றனர். காதலர்களுடன் வந்து நேரத்தை செலவிடுகின்றனர். அதுவும், வரும், 14ம் தேதி காதலர் தினத்தன்று அதிக எண்ணிக்கையில் காதலர்கள் பைக்குகளில் பயணம் செய்வர். வேகமாக பைக்கில் பயணித்து அதை வீடியோவாக எடுத்தும், சமூக வலைத்தளங்களில் பதிவிடுவர்.

அதனால், விபத்துகள் எதுவும் ஏற்படக்கூடாது என்பதற்காக, காதலர் தினத்தன்று நந்திமலைக்கு செல்ல தடை விதித்து சிக்கபல்லாபூர் மாவட்ட கலெக்டர் பிரபு உத்தரவிட்டு உள்ளார். இந்த உத்தரவு சில இளம் ஜோடிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம், இம்முடிவு சரியானதே என, பலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us