ADDED : அக் 31, 2025 11:17 PM

குழந்தைகளுக்கு புதிதாக ஏதாவது 'ஸ்நாக்ஸ்' செய்ய வேண்டும் என விரும்பினால், வாழை பழங்களை வைத்து, வாழைப்பழ உருண்டை செய்யலாம். இதனால், குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
செய்முறை ஒரு வாணலியில் இரண்டு டீஸ்பூன் நெய் ஊற்றவும். நெய் கொஞ்சம் சூடேறியதும,் வெட்டி வைத்து உள்ள இரண்டு செவ்வாழை பழங்களை சேர்க்கவும்.
நெய், செவ்வாழை இரண்டும் நன்கு வதங்கி வரும்போது, ஒரு கப் ரவையை உடன் சேர்க்கவும்.
ஐந்து நிமிடத்துக்கு நன்கு வதங்கிய பின், தேங்காய் துருவலை சேர்த்து, நன்றாக கலக்க வேண்டும்.
இதனுடன் ஒரு கப் பால் சேர்த்து, ரவையை நன்கு வேக வைக்கவும். பின், ஒரு கப் சர்க்கரை, சிறிதளவு ஏலக்காய் துாள் சேர்த்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை மிதமான சூட்டில், ஐந்து நிமிடம் வைக்கவும்.
கை தாங்கும் சூடு இருக்கும்போது, சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
பின், வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி, உருட்டி வைத்துள்ள உருண்டைகளை உடன் சேர்த்து கொள்ளவும்.
உருண்டைகள் அனைத்தும் பொன்னிறமாகும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து, லேசாக பொறித்து எடுத்தால் போதும். சுவையான வாழைப்பழ உருண்டை ரெடி.
இனிப்பு, சுவைக்கு ஏலக்காய் துாள் சேர்த்துள்ளதால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். செவ்வாழை, பால், நெய்யில் உள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தும் உடலுக்கு வலிமையை கொடுக்கும்
- நமது நிருபர் -

