பெங்களூரு - செங்கோட்டை வரும் 24ல் கோடை சிறப்பு ரயில்
பெங்களூரு - செங்கோட்டை வரும் 24ல் கோடை சிறப்பு ரயில்
ADDED : மே 21, 2026 12:18 AM
பெங்களூரு: 'பயணியர் வசதிக்காக, பெங்களூரு - தென்காசி - செங்கோட்டை இடையே, வரும் 24ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும்' என. தென்மேற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:
ரயில் எண் 06513: பெங்களூரு கன்டோன்மென்ட் - தென்காசி இடையே ஒரு வழி விரைவு சிறப்பு ரயில், வரும் 24ம் தேதி இரவு 10:20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 1:00 மணிக்கு தென்காசி சென்றடையும்.
மறு மார்க்கத்தில் எண் 06514: செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் ஒரு வழி சிறப்பு ரயில், செங்கோட்டையில் இருந்து 25ம் தேதி இரவு 11:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 1:00 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தடையும்.
இந்த ரயில், கார்மேலரம், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லுார் வழியாக தென்காசி செல்லும்.
இதே போல, மறுமார்க்கத்திலும் ரயில் நிற்கும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.
