பி.எம்.டி.சி.,யில் ஒலி விளம்பரங்கள் விரைவில் அறிமுகம்
பி.எம்.டி.சி.,யில் ஒலி விளம்பரங்கள் விரைவில் அறிமுகம்
ADDED : ஜூலை 04, 2026 11:25 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு: டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால், பி.எம்.டி.சி., மாதம், 40 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டத்தில் இயங்குகிறது. இதை சரி செய்வதற்காக, பஸ்களின் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அதே சமயம், டிக்கெட் கட்டணம் மட்டுமின்றி, விளம்பரங்கள் மூலமாகவும் வருவாய் ஈட்ட பி.எம்.டி.சி., பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வகையில், பி.எம்.டி.சி., பஸ்களில் ஆடியோ வடிவிலான விளம்பரங்களைஒலிபரப்ப திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த அறிவிப்புக்கு அடுத்தபடியாக இந்த விளம்பரங்கள் ஒலிபரப்பப்பட உள்ளன. இதற்கான டெண்டர் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
