பெங்களூரு தமிழ்ச்சங்கம் நாளை 166 வது திருமண மேடை
பெங்களூரு தமிழ்ச்சங்கம் நாளை 166 வது திருமண மேடை
ADDED : பிப் 14, 2026 04:57 AM
ஹலசூரு: பெங்களூரு தமிழ்ச்சங்கம் சார்பில் நாளை 166 வது, திருமண மேடை நிகழ்வு நடக்கிறது.
பெங்களூரு ஹலசூரில் உள்ள பெங்களூரு தமிழ்ச்சங்கம் சார்பில் , 2002ம் ஆண்டு முதல், திருமண மேடை நிகழ்ச்சி ந டத்தப்படுகிறது.
கணவனை இழந்தவர்கள், மனைவியை இழந்த கணவர்களுக்கு திருமண மேடை நிகழ்ச்சியின் மூலம் திருமணம் செய்து வைக்கப்பட்டு உள்ளன. கலப்பு திருமணமும் வெற்றிகரமாக நடத்தி உள்ளனர்.
இந்நிலையில், 166 வது திருமண மேடை நிகழ்ச்சி, நாளை காலை 10:30 மணிக்கு தமிழ் சங்கத்தில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள பதிவு செய்த ஆண்கள், பெண்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளனர்.
பெங்களூரை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, தமிழகம், மஹாராஷ்டிரா, டில்லி, வெளிநாடுகளில் வசிக்கும் பலர், திருமண மேடை நிகழ்ச்சி மூலம் பலன் அடைந்து இருப்பதாக, தமிழ்ச்சங்க செயலர் மு.சம்பத் கூறி உள்ளார்.
