/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நகராட்சியாக மாறியது பங்கார்பேட்டை வார்டுகள் எண்ணிக்கை 35 ஆகிறது
/
நகராட்சியாக மாறியது பங்கார்பேட்டை வார்டுகள் எண்ணிக்கை 35 ஆகிறது
நகராட்சியாக மாறியது பங்கார்பேட்டை வார்டுகள் எண்ணிக்கை 35 ஆகிறது
நகராட்சியாக மாறியது பங்கார்பேட்டை வார்டுகள் எண்ணிக்கை 35 ஆகிறது
ADDED : செப் 22, 2025 03:59 AM
பங்கார்பேட்டை : டவுன் சபையாக இருந்த பங்கார்பேட்டையின் அந்தஸ்தை உயர்த்தி, நகராட்சியாக்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோன்று, 'குடா'வில் இருந்த பங்கார்பேட்டையை பிரித்து, 'புடா' உருவாக்கப்பட்டுள்ளது.
பங்கார்பேட்டை டவுன் சபையை, நகராட்சியாக மாற்ற வேண்டும் என, 25 ஆண்டுகளாக பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்த கனவு தற்போது நனவாகி உள்ளது. இது, தொகுதி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். கிராம பஞ்சாயத்துகளாக இருந்து வந்த தேசஷிஹள்ளி, காரஹள்ளி, பெங்கனுார், ஹொசஹள்ளி ஆகியவை நகராட்சியில் சேர்க்கப்படுகிறது. அந்தஸ்து உயர்வால், பங்கார்பேட்டையில் வார்டுகள் எண்ணிக்கை 35 ஆக அதிகரிக்கப்படுகிறது.
'குடா' என்ற கே.ஜி.எப்., அர்பன் டெவலப்மென்ட் அத்தாரிட்டியில் இருந்து வந்த பங்கார்பேட்டை, 'புடா' எனும் பங்கார்பேட்டை அர்பன் டெவலப்மென்ட் அத்தாரிட்டியாக மாறுகிறது. பங்கார்பேட்டை நகராட்சி பகுதிகளின் விரிவான மேம்பாட்டுக்கு 257 கோடி ரூபாய்க்கான திட்ட அறிக்கை தயாரித்து, அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
முதல்வரின் சிறப்பு நிதியில் பஞ்சாயத்து அலுவலகம், கன்னட பவன், அம்பேத்கர் பவன், கோலார் சாலை அகலப்படுத்துதல் ஆகியவைகளுக்காக 8 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் விரைவில் தொடங்கும்.
டவுன் சபையை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமென்றால், மக்கள் தொ கை 50,000 ஆக இருக்க வேண்டும். 2011ன் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 44,849 பேர் மட்டுமே இருந்தனர். ஆனால், 2024- - 25ல் மக்கள் தொகை 62 ஆயிரத்தை விட அதிகரித்துள்ளது.
இத்துடன் எல்லை விரிவாக்கம் செய்யப்படுவதால், பங்கார்பேட்டை நகராட்சி பகுதியில் மக்கள் தொகை ஒரு லட்சத்தை தாண்டும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.
நகராட்சியாக தரம் உயர்த்தியதற்கும், புடா ஏற்படுத்தவும் பெருமுயற்சி மேற்கொண்ட தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாராயணசாமிக்கு பங்கார்பேட்டை டவுன் சபை தலைவர் கோவிந்தா உட்பட நகரா ட்சி உறுப்பினர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.