/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பங்கார்பேட்டை ரயில் சுரங்க பாதை மழைநீர் தேக்கத்தால் பெரும் அவதி
/
பங்கார்பேட்டை ரயில் சுரங்க பாதை மழைநீர் தேக்கத்தால் பெரும் அவதி
பங்கார்பேட்டை ரயில் சுரங்க பாதை மழைநீர் தேக்கத்தால் பெரும் அவதி
பங்கார்பேட்டை ரயில் சுரங்க பாதை மழைநீர் தேக்கத்தால் பெரும் அவதி
ADDED : ஜூன் 06, 2025 11:19 PM
பங்கார்பேட்டை: பங்கார்பேட்டை -- கோலார் மார்க்கமாக செல்லும் ரயில் பாதை பகுதியில் உள்ள கெங்கமனப்பாளையா, சிக்க அகண்டஹள்ளி, சக்கரஹள்ளி, திம்மாபுரா ஆகிய கிராமங்களின் அருகேயும்; மாரிகுப்பம் -- பங்கார்பேட்டை மார்க்கத்தில் சின்கோட்டை, இந்திரா நகர் ஆகிய கிராமங்களின் அருகிலும் ரயில்வே சுரங்க பாதைகள் உள்ளன.
இதன் வழியாக தான் கல்வி, வியாபாரம், கட்டுமான பணிகள் என பலவற்றிற்கும் பங்கார்பேட்டைக்கு இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வந்து செல்ல வேண்டும்.
இந்நிலையில், மழை பெய்தால், தண்ணீர் செல்ல சீரான வழி இல்லாததால் பாலம் பகுதியில் தணணீர் தேங்குகிறது. இதனால் இருசக்கர வாகனம், லாரி, டெம்போ, கார் எதுவும் செல்ல முடிவதில்லை.
இப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று மாநில விவசாய சங்கம், பசுமை இயக்க துணைத் தலைவர் கே.நாராயண கவுடா, விவசாய சேனை கோலார் மாவட்ட தலைவர் மரகல் சீனிவாஸ், கோலார் தலித் சேனா தலைவர் வெங்கடேஷ் ஆகியோர், தென் மேற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு புகார் செய்துள்ளனர்.